Sunday, November 28, 2010

2. வேதனையை உணரும் தோல்கள்


நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும்

(அல் குர்ஆன் 4:56)

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு. இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.
அது போல் தான் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது நபிக்கு இது எப்படித் தெரியும்? திருக்குர்ஆன் 'அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம்' என்று கூறாமல் 'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்' என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.



No comments:

Post a Comment